அடே… திமுகவை சொன்னா இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது?… ஒரே வார்த்தையில் எடப்பாடியை காலி செய்த… விஜய்யின் அதிரடி டயலாக்… அரசியலில் பரபரப்பு…!!

Spread the love

விஜய் மேற்கொண்டுள்ள இந்த அதிரடிப் பிரச்சாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து உரையாற்றிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மிகக் கடுமையாகச் சாடினார். “பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாக மாறியுள்ளது. திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான்; இருவருக்கும் ஒரே ஓனர்தான்” என்று குற்றம் சாட்டிய விஜய், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு அதிமுக துரோகம் செய்துவிட்டு, திமுகவின் பினாமியாகச் செயல்படுவதாகச் சாடினார்.

மேலும், தனது உரையில் மதச்சார்பின்மை மற்றும் வழிபாட்டு நம்பிக்கை குறித்துப் பேசிய விஜய், “நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல; கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்வோம். திமுகவைப் போல வெளிவேஷம் போட்டுக்கொண்டு பம்ம மாட்டோம்” என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்த்தி விமர்சிக்க விமர்சிக்க தவெக மேலும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்றும், சாதாரண மக்களை தேர்தலில் நிற்க வைத்து குறுநில மன்னர்களைத் தவெக தோற்கடித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார.

திமுகவை உண்மையிலேயே எதிர்த்து நிற்கும் ஒரே சக்தி தவெக மட்டும்தான் என்று வலியுறுத்திய விஜய், மக்கள் திமுக மற்றும் அதிமுகவின் பொய்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். சத்யபாமா எந்தவிதக் குதிரைப் பேரமும் இன்றி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டே தவெகவிற்கு வந்துள்ளதாகத் தெளிவுபடுத்திய அவர், கொங்கு பகுதி மக்கள் சத்தியத்தின் பக்கம் நின்று தவெக வேட்பாளர் சத்யபாமாவிற்கு விசில் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Swetha

Recent Posts

விசிக-தவெக கூட்டணியை உடைக்கப் பார்க்கிறதா பாமக?…. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு…. அடுத்த டுவிஸ்ட்….!

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…

5 seconds ago

BREAKING: காலையிலேயே ஷாக்….. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை….!

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…

5 minutes ago

ஐயோ கொடுமையே… இனிமே என்னால வாழ முடியாது… மகளைப் பறிகொடுத்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை… தெலங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…

17 minutes ago

ஐயோ… வீடுகளை அதிரவைத்த பயங்கர வெடிப்பு… வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்… மங்களூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

மங்களூரு சுருத்கல்லில் உள்ள 'மங்களூர் ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' ஆலையில், உயர் அழுத்த குளிரூட்டும் பிரிப்பான் வெடித்து சிதறியதால்…

23 minutes ago