நடிகர் விஜய், இப்போது தமிழ் சினிமாவில் டாப் ஸ்டராக இருக்கிறார். ஆனால், அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்தான் விஜயின் சினிமா பயணத்தில், ஆரம்ப காலத்தில், பக்கபலமாக துணையாக இருந்தவர். அவருக்கான சினிமா வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நடிகர் விஜயகாந்துடன் பேசி, செந்தூரப்பாண்டி படத்தில், விஜயை அவருக்கு தம்பியாக நடிக்க வைத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தவர். விஜய் நடிக்கும் படத்துக்கான கதையை ஓகே சொல்வதே எஸ்ஏசி தான். ஆனால், பெரிய நடிகராக வளர்ந்த பிறகு விஜய், தந்தையை விட்டு ஒதுங்கி, பிரிந்து விட்டார்.
இதுகுறித்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, ஒரு தந்தையாக, விஜயின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவன் நான். ஒரு கட்டத்தில், அவரது பர்சலான விஷயத்தில் கூட நான் தலையிடுவதாக அவர் சங்கடப்பட்டார். ஆனால், அதில் கூட அவரது நன்மையை தான் நான் பார்த்தேன். ஒரு வாரம், இரண்டு வாரம், மாதக்கணக்கில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருப்போம். நாங்கள் இருவரும் எப்போது சண்டை போட்டாலும் வெளியே தெரிந்துவிடும். எப்போது சண்டை போட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் உண்டு.
எனது இரண்டாவது மகள் வித்யா, கேன்சர் காரணமாக இறந்து விட்டாள். அப்போது விஜய்க்கு 10 வயது இருக்கும். அதனால் கேன்சர் நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் ஒரு மிகப்பெரிய கேன்சர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்ட வேண்டும். அதற்கு விஜயை பெரிய டாக்டராக்க வேண்டும்.
கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டராக அவரை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவர் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். பெற்ற மகனாக, ஒரு தந்தையின் ஆசையை அவர் நிறைவேற்றவில்லை. நடிகராவது மட்டுமே அவரது ஆசையாக இருந்தது, என கூறி இருக்கிறார் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…