“அநீதி, அராஜகம், தில்லுமுல்லு திமுக முதற்றே உலகு” திருவள்ளுவர் மட்டும் இருந்திருந்தால்… திமுகவை விஜய்யின் அதிரடி அட்டாக்…

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 3-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக உரையாற்றியதோடு மட்டுமல்லாமல், மேடையில் நடனமாடியும் அனைவரையும் மகிழ்வித்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக ஒரு “அளவிட முடியாத கடல்” போல உறுதியுடன் செயல்படும் என்றும், மக்களின் பேராதரவுடன் ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கட்டிலில் அமர்வதே தங்களின் இலக்கு என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்த விழாவில் ஆளுங்கட்சியான திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக, இன்றைய காலத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு “அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை எல்லாம் திமுக முதற்றே உலகு” என்றுதான் குறள் எழுதியிருப்பார் என சாடினார் . விஜய்யின் இந்த வசனத்தைக் கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைந்து “ஒன்ஸ் மோர்” எனக் கேட்க, அவர் மீண்டும் அதே பாணியில் திமுகவை விமர்சித்துக் கூறினார் . இதன் மூலம் வரும் தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே நேரடி அரசியல் போர் இருக்கும் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?… Law & Order எங்கே போச்சு?… 12 பேர் மாயமான விவகாரத்தில் அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்…!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…

6 minutes ago

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

11 minutes ago

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

21 minutes ago

திகில் நிமிடங்கள்!…நொடியில் தப்பிய உயிர்… பைக்கில் சென்ற தம்பதி மீது சரிந்து விழுந்த ராட்சத தூண்… வெளியான பகீர் CCTV காட்சி…!!

காசிப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுவா சாலையில், இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அரசு விளம்பரப்…

28 minutes ago

இப்படியொரு பரிசா?… லைசென்ஸ் கூட இல்லை… ஆனால் 15 வயது மகனுக்கு ரூ.1.62 கோடி BMW கார்… இணையத்தில் வெடித்த விவாதம்…!!

மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…

38 minutes ago

உஷார் மக்களே!… ரூ.1,000 கமிஷனுக்காக ஆதார் கொடுத்த மாணவர்கள்… வீடு தேடி வந்த வங்கி நோட்டீஸால் உறைந்து போன குடும்பம்… நடந்தது என்ன?…!!

சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…

47 minutes ago