நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை மாநாடு நடத்தினார். தற்போது சனிக்கிழமை தோறும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூரில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு நடுவே விஜய் நாகையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக தேர்தல் பரப்புரை ஆற்றினார். தற்போது திருவாரூரில் பச்சை துண்டுடன் பிரச்சாரம் செய்து வருகிறார் விஜய்.
அப்போது பேசிய அவர், “நண்பா இது சும்மா கூட்டமா..? எல்லோரும் நீங்க ஓட்டு போட மாட்டீங்கனு சொல்றாங்க.. உண்மையாவா..? நண்பா உன்னை தான் கேட்கிறேன்.. கேட்குதா..? திருவாரூர்னா ஆழித்தேர் தான் உடனே நியாபகத்துக்கு வரும். திருவாரூர் தேர்னா சும்மாவா. மேலும் தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், மிரட்டி பார்க்குறீங்களா CM சார்? என கேள்வி எழுப்பினார். ‘பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுவிட்டு தில்லா கெத்தா நேர்மையா தேர்தலை சந்திக்க வாங்க சார், நீங்களா? இந்த விஜய்யா? என பார்த்துக் கொள்வோம்’ என பேசினார்.
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…
இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…