Categories: சினிமா

தொடரும் ‘லியோ’ பட சிக்கல்… தனி விமானத்தில் கெத்தாக வந்திறங்கிய விஜய்… வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்திரைப்படமானது நாளை ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை லியோ திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் பல. முதலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்தது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் இதைத்தொடர்ந்து ரிலீசான லியோ ட்ரைலர் ரசிகர்களுக்கு விருந்து வைத்தது.

இதைத்தொடர்ந்து வெளியானது 4 மணி சிக்கல். தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.  லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கான அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், நீதிமன்றம் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பளித்தது.

தற்பொழுது ஒரு சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது . அதாவது , ரோகினி திரையரங்கம் ‘லியோ படம் ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படாது’ எனக் கூறியுள்ளது. இப்படி ரிலீசாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது லியோ. இந்நிலையில் நடிகர் விஜய் தனி விமானத்தில் இருந்து இறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடைபெறும் பிரச்சனைகளை சமாளிக்க விஜய் வெளிநாட்டிலிருந்து வந்தாரா? அல்லது ஆள விட்டா போதும் என வெளிநாட்டிற்கு கிளம்புகிறாரா? என தெரியவில்லை. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

53 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

1 மணத்தியாலம் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago