தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் , இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவருடைய இயக்கத்தில் இறுதியாக பிச்சைக்காரன் திரைப்படம் வெளியானது. இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபித்து காட்டினார். 2016 ஆம் ஆண்டு அவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்து அவருக்கு நல்ல மார்க்கெட்டை பெற்று தந்தது.
இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் ஆண்டனி மிகப் பெரிய விபத்தில் சிக்கி பலத்த காயங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு தான் சகஜ நிலைமைக்கு திரும்பினார். இது தொடர்பாக அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் விபத்துக்கு குறித்த மனநிலையை பகிர்ந்து கொண்டார். அதில், கடலில் ஜெட் ஸ்கை படகில் நானும் நடிகையும் இருந்தோம்.
மற்றொரு படகு காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தது. ஒரு நல்ல ஷார்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக படகை நெருங்க முயற்சித்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அழகியின் உயரம் காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து ஜெட்ஸ்கி மீது மோதி விபத்துக்குள்ளானது. படகு கட்டுப்பாட்டை இழந்து நேர் எதிரே இருந்த படகில் மோதியதில் என் முகத்தில் அடிபட்டு மூக்கு உடைந்தது. என் தாடை விழுந்தது. உடனே அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகத்தில் எட்டு தகடுகள் உள்ளது. அந்த வழியில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் கொண்டிருக்கிறேன் என்று விஜய் ஆண்டனி உருக்கமாக பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…