ஒரு ‘செலிபிரிட்டி’ என்றால் யார்?…. விஜய்யை காலி செய்ய கிருத்திகா உதயநிதி போட்ட ஒத்த போஸ்ட்….. பற்றி எரியும் அரசியல் களம்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமீபகாலமாக அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறார். குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் மாமல்லபுரத்திற்கு வரவழைத்தது மற்றும் திமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது போன்ற செயல்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளும், பொதுவெளியில் அவர் தன்னை முன்னிலைப்படுத்தும் விதமும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன.

இந்தச் சூழலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. “பிரபலம் என்றால் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். ஒரு சாதாரண தனி மனிதனுக்கும், பிரபலமானவருக்கும் இடையிலான வித்தியாசத்தை தீர்மானிப்பது மக்களின் கண்ணோட்டம் மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் அன்பையும், கண்ணோட்டத்தையுமே தனது சுய அடையாளமாகத் தவறாகப் புரிந்துகொண்டு, அதில் மயங்கித் தனது சுயத்தை இழப்பது ஒருவரைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும் என்று கிருத்திகா உதயநிதி எச்சரிக்கும் தோனியில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் மத்தியில் விஜய் முன்வைக்கும் கருத்துகளை மறைமுகமாகச் சாடுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கிருத்திகாவின் இந்தப் பதிவு, திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் என இரு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஒரு தலைவர் தன்னை எவ்வாறு நிதானமாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனையாகவே இது பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், கிருத்திகாவின் இந்த “சூசகமான அறிவுரை” விஜய் தரப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

BIG BREAKING: அண்ணாமலை விலகல்..? பாஜகவில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…

17 seconds ago

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

6 minutes ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

9 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

18 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

24 minutes ago