தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நடிகை நயன்தாராவை 6 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து எழுந்த பல சர்ச்சைகளுக்கும், பல கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த தம்பதியினர்.
தற்பொழுது இவர்கள் தங்களது குழந்தையுடன் மகிழ்வான வாழ்வை வாழ்ந்து கொண்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் ஜவான் திரைப்படம் தற்பொழுது ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இவர் தற்பொழுது 9skin கம்பெனியை பார்த்துக் கொள்வதில் மிகவும் பிசியாக உள்ளார். ஆனால் திருமணத்துக்கு பின்னர் ஒரு படத்தை கூட இயக்கவில்லை. இவர் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் உருவாக இருந்த ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் இப்படத்தை அவர் தற்பொழுது இயக்கவில்லை. இதைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்பட்டது. அனால் அதற்கான அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தல தோனியை வைத்து விளம்பர படம் ஒன்றை இயக்கியுள்ளார்.. இந்த விளம்பரத்தில் எம்.எஸ்.தோனி உடன் சேர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது X தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…
ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…