தமிழ் சினிமாவில் வெறித்தனமான ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஆசை, காதல் கோட்டை, வாலி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகரானார்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வரும் நிலையில் “முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி” என்ற ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளார்.
இதுவரை பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் சில காட்சிகள் 2022 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Last seen alive என்ற படத்தின் காட்சிகளை நினைவூட்டது போல உள்ளதாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
விடாமுயற்சி படம் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படத்தின் ரீமேக் உரிமையை முறையாகப் பெறாமலேயே படமாக்கி விட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் லைகா நிறுவனத்துக்கு பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக சொல்லப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகவிருந்த படம் தாமதம் ஆனது.
இது சம்மந்தமாக லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவு எட்டப்பட்டது. ஆனாலும் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் அளவுக்கு உரிமைத் தொகை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தில் இன்னொரு படத்தின் காட்சிகளு இடம்பெறுவதாக சொல்லப்படுவதால் வேறு ஏதேனும் சிக்கல்கள் எழுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…