தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவும் விசிகவும் கடும் கலக்கத்திலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; ஏனெனில், வன்னியர் வாக்குகள் நிறைந்த இந்தத் தொகுதிகளில் பாமகவின் முடிவு அதிமுகவின் வெற்றி வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
மற்றொருபுறம், ஆளும் தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, இந்த இடைத்தேர்தல் முடிவுகளை எண்ணிக் பீதியில் உறைந்துள்ளது. தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றிபெற்றால், சட்டப்பேரவையில் அக்கட்சியின் தனிப்பெரும் பலம் 109 ஆக உயர்ந்துவிடும். அவ்வாறு நடந்தால், தவெக அரசுக்குத் தேவையான பெரும்பான்மைக்கு விசிகவின் 2 எம்.எல்.ஏ-க்களின் தயவு இனி தேவையில்லாமல் போய்விடும். இதன்காரணமாக, ஆட்சியில் தங்கள் கட்சியின் ‘ஆக்டிவ் ரோல்’ மற்றும் கூட்டணிக்கான முக்கியத்துவம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில் விசிக நிர்வாகிகள் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…