#image_title
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பகத் பாஸில், அமிதாபச்சன், அபிராமி, துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வேட்டையன் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. சூப்பர் ஸ்டாரின் படம் ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். காலை 9 மணிக்கு வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பானது.
தமிழ்நாட்டில் மட்டும் 900 திரையரங்குகளில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேட்டையன் திரைப்பட முதல் காட்சியை பார்த்தனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜயும் மாறுவேடத்தில் வந்து வேட்டையன் திரைப்படத்தை பார்த்து சென்றார்.
#image_title
திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…