#image_title
நடிகர் கிஷோர் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவர் வனயுத்தம் திரைப்படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்துள்ளார். மேலும் ஹரிதாஸ் திரைப்படத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தூங்காவனம், புலி முருகன், கபாலி, ஆரம்பம் உன்கிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் கிஷோர் நடித்துள்ளார்.
பொல்லாதவன் திரைப்படத்தில் கிஷோரின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும்.வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களில் கிஷோருக்கு என ஒரு கதாபாத்திரத்தை ஒதுக்கி இருப்பார். அந்த வகையில் ஆடுகளம், விசாரணை, வட சென்னை உள்ளிட்ட படங்களில் கிஷோரின் நடிப்பு யதார்த்தமாக இருக்கும். சமீபத்தில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கிஷோர் பற்றி கூறியிருந்தார்.
அவர் கூறியதாவது நான் பார்த்த மனிதர்களில் நடிகர் கிஷோர் மிகவும் வித்தியாசமானவர். அவரது பர்சனாலிட்டி ரொம்ப பெருசு. நான் சினிமாவில் பார்த்த ஒரு கம்யூனிஸ்ட் கிஷோர்தான். அவரை சினிமாவில் நான் பார்த்த காந்தியன் என்று கூட சொல்லலாம். அவரை அப்படி சொல்வதற்கு ஒரு காரணமும் உள்ளது. கிஷோர் அவரது வேலைகளை அவர்தான் பார்த்துக் கொள்வார். சாப்பாடு கூட அவரே தான் எடுத்து போட்டு சாப்பிடுவார்.
அவர் சாப்பிடும்போது வேறு யாராவது சென்றால் அவர்களுக்கும் அவர் தட்டை எடுத்து பரிமாறுவார். அவர் வேலைகளை வேறு யாராவது செய்கிறார்கள் என்றால் உடனே பதட்டம் ஆகிவிடுவார். தற்போது கிஷோர் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நான் பார்த்த மனிதர்களில் சிறந்த மனிதர் கிஷோர் என பெருமையாக பேசி உள்ளார்.
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் குமார்கண்டு ஒன்றிய பகுதியில், இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்கச் சென்ற வாலிபரை அப்பகுதி…
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…
டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…
அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…