ஜோதிடர் சாஸ்திரத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றும். அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசியினருக்கும் இருக்கும். ஆனால் அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே நன்மையடைகின்றன. முதன்மை கிரகமாக இருக்கும் சுக்கிரன் தன்னுடைய நிலையில் இருந்து அசையும் சமயத்தில் ராசிகளின் வாழ்க்கையில் அமோகமான பல மாற்றங்கள் ஏற்படும். ஏனென்றால் சுக்கிரன் திருமணம், ஆடம்பரம், காதல் மற்றும் செல்வம் நிதிநிலை மாற்றங்கள் ஆகியவற்றிற்கு அதிபதியாக உள்ளார்.
சுக்கிரன் 26 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றிக் கொள்வார். அதனைப் போலவே 13 முதல் 14 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரங்களையும் மாற்றுவார். அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார். டிசம்பர் 20ஆம் தேதி சுக்கிரன் மூல நட்சத்திரத்தில் பெய்கிறார். அதன் பிறகு டிசம்பர் 30ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவார். இந்தப் பெயர்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரன், பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் போது அவர்களுடைய முயற்சிகள் பல மடங்கு அதிகரிக்கும். நினைத்து வைத்திருந்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். வேலையில் பணி முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் சரிவரும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி அடையும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் சரிவரும். புதிய ஆதாயங்கள் மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்டகால குடும்ப பிரச்சினைகள் சுக்கிரன் பயிற்சி அடையும்போது தீர்ந்துவிடும். மன கஷ்டங்கள் இருந்தால் இந்த காலப்பகுதியில் சரியாகிவிடும்.
மேஷம்:
சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி ஏற்படும் சமயத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சியுடன் காத்திருப்பவர்களுக்கு இந்த காலப்பகுதியில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி, பண கஷ்டங்கள் மற்றும் மனக்கசப்புகள் ஆகியவை இந்த காலப்பகுதியில் சரியாகிவிடும்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…