“இயற்கையோடு போராடும் 101 வயது சிங்கம்… நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து வீரபாண்டியன் உருக்கம்…!

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான 101 வயது நிறைவடைந்த தோழர் ஆர். நல்லகண்ணு, வயது மூப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பகிரப்படும் செய்திகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், “தோழர் நல்லகண்ணு தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என்பது உண்மைதான். ஆனால், அவரைப் பற்றிப் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் சில பின்னடைவுகள் இருந்தாலும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு 24 மணி நேரமும் உயர்தரச் சிகிச்சைகளை வழங்கி வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததோடு, அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரு நூற்றாண்டு காலப் போராட்ட வரலாற்றைக் கொண்ட இந்த மகத்தான தலைவர், தற்போது இயற்கையுடன் போராடி வருவதாகவும், அவர் விரைவில் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. தேவையற்ற அச்சத்தைப் பரப்பும் செய்திகளைத் தவிர்த்து, மருத்துவமனை மற்றும் கட்சித் தரப்பில் வெளியாகும் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

S.RISHVANA

Recent Posts

21 லட்சம் ஃபாலோயர்ஸ் இருந்தும் 33 ஓட்டுதானா?… ஜோதிடருக்கு சொந்த ஊரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி… இணையத்தை சூடேற்றும் ராஜஸ்தான் தேர்தல் கூத்து….!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை (Followers) வைத்திருப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்…

54 seconds ago

ஆற்றில் நுரை பொங்க சோப்பு தான் காரணமா?…. “அந்த சோப்பு பேர் என்ன?”…. சிரிப்பதா.. அழுவதா?….. அரசைக் கிழித்துத் தொங்கப்போட்ட நாம் தமிழர் சீமான்….!

ஆறுகளில் நுரை பொங்கி வழியும் அவலநிலைக்கும், கழிவுநீர் மாசுபடுவதற்கும் மக்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவே காரணம் என சுற்றுச்சூழல்…

5 minutes ago

இரவோடு இரவாக மாறிய அதிகாரிகள்…. தமிழக நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!

தமிழக நிர்வாக நலன் மற்றும் பணியிடங்களை முறைப்படுத்தும் நோக்கில், பல மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள் உட்பட முக்கிய…

9 minutes ago

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

14 minutes ago