விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். எஸ் யு அருண்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சூரஜ் வெஞ்சார மூடும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் இரண்டாவது பாகம் தற்போது வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் என தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பெற்று இருந்த B4U என்டர்டெயின்மென்ட் ஒ டி டி வியாபாரம் நடப்பதற்கு முன்னதாகவே ரிலீஸ் செய்தியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை படம் ரிலீஸ் ஆகவில்லை.
அதன் பிறகு மதியம் மூன்று மணிக்கு மேல் நடந்த சமரச பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் மாலை 5 மணிக்கு சில திரையரங்குகளிலும் 6 மணிக்கு மேல் பல திரையரங்குகளிலும் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தாமதமாக வெளியான வீர தீர சூரன் திரைப்படம் குறித்த ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது. விக்ரம் இந்த படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சுராஜ் வெஞ்சரமுடு கண்ணன் கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவர் அவருடைய அப்பாவிடம் அடியாளாக வேலை பார்த்து வந்த காளி அவர்களை விட்டு விலகி துஷாராவை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றார். சுராஜ் மற்றும் அவருடைய அப்பாவையும் என்கவுண்டர் பண்ண துடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் எஸ் ஜே சூர்யாவிடம் இருந்து தன்னையும் தன்னுடைய மகனையும் காப்பாற்ற முன்னாள் முதலாளி விக்ரமை நாட அதன் பிறகு நடக்கும் காலி வேட்டை தான் இந்த வீர தீர சூரன் இரண்டாம் பாகம்.
செய்யாத தவறுக்கு ரசிகர்கள் மனம் வருந்தி விடக் கூடாது என்பதற்காக வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்ட சித்தா படத்தில் இயக்குனர் எஸ் யு அருண்குமார் விக்ரமை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளார். விக்ரம் மற்றும் எஸ் ஜே சூர்யா என ஒவ்வொருவரையும் நடிப்பும் ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று உள்ளது.
விக்ரம் நடிப்புக்கும் மாஸ் காட்சிகளுக்கும் ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பின்னணி இசை மிகப் பெரிய பலமாக மாறி உள்ளது. அதிலும் குறிப்பாக கன்னிவெறி காட்சிகளில் வரும் இசை வெறித்தனம் என ரசிகர்கள் கூறுகிறார்கள். காலை முதல் படம் வெளியாகாமல் மாலையில் வெளியான போதும் விக்ரமவுக்காக திரையரங்குக்கு சென்று பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் ஒர்த் வர்மா என்றே கூறிக் கொண்டு வெளியே வருவார்கள் என ரசிகர்கள் படத்துக்கு அதிக மார்க் போட்டு வருகிறார்கள்.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…