தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்றிருந்தாலும், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சமீபத்திய அரசியல் கருத்துக்கள் தமிழக அரசியலிலும், விசிக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக கூட்டணியில் தாங்கள் முழுமையாக இணைந்துவிடவில்லை என்றும், திமுகவுடனான அரசியல் உறவு இன்னும் தொடர்கிறது என்றும் அவர் பேசியிருப்பது தவெக தலைமைக்குச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயையும் சீமானையும் “ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்” என்று கடுமையாக விமர்சித்த திருமாவளவன், தற்போது அதே விஜய் அமைச்சரவையில் விசிகவை இடம்பெறச் செய்திருப்பது அவர் மீதான அரசியல் விமர்சனங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முரண்பட்ட அணுகுமுறைக்கு விசிகவின் உட்கட்சிப் பூசல்களும், திமுகவின் அழுத்தங்களுமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தவெக கூட்டணியை வரவேற்றாலும், மூத்த நிர்வாகிகள் பலருக்கு திமுக கூட்டணியை விட்டு வெளியேறியதில் உடன்பாடில்லை. விசிக தவெக பக்கம் சென்றதால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளை தன்வசம் இழுக்க திமுக முயற்சித்து வருகிறது; இதற்கு உதாரணமாக பனையூர் பாபு திமுகவில் இணைந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். இதனால், திமுகவை முழுமையாகப் பகைத்துக் கொள்ளத் தயங்கும் திருமாவளவன், தன் மீதான “பதவி ஆசை” விமர்சனங்களைத் தவிர்க்கவே இவ்வாறு மாற்றி மாற்றிப் பேசி வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் அதிமுக தரப்பில் இருந்தும் திருமாவளவனின் இந்த இரட்டை நிலைக்குக் கண்டனங்களும் கிண்டல்களும் எழுந்துள்ளன. 5 ஆண்டுகள் தவெக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் கூட்டணி குறித்து தெளிவற்ற கருத்துக்களை அவர் வெளியிடுவது விசிகவிற்குள் இருக்கும் பிளவையே காட்டுகிறது. மேலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்பதும், அதற்கு தவெக அரசு உடனுக்குடன் அரசாணை பிறப்பிப்பதும் விசிகவிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வட தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் பாமகவின் வாக்கு வங்கியைத் தன் பக்கம் இழுக்க தவெக வியூகம் வகுத்து வருகிறது. ஒருவேளை தவெக கூட்டணிக்குள் பாமக அதிகாரப்பூர்வமாக நுழைந்தால், விசிக அங்கிருந்து விலகி மீண்டும் திமுக கூட்டணியை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆனால், அப்போது திமுக தங்களை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் விசிகவிற்கு உள்ளதால், எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி தவெக, திமுக ஆகிய இரு துருவங்களையும் கையாண்டு, திருமாவளவன் ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார்.
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…
தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…