தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள அக்கட்சி, தவெக-விற்கு ஆதரவு அளிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண்ராஜிடம் நேரில் வழங்கியது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) விஜய்க்குத் தனது ஆதரவை உறுதிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது IUML கட்சியின் ஆதரவும் சேர்ந்துள்ளதால் தவெக கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.
இதன் மூலம், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை இலக்கைத் தாண்டி, விஜய்க்கு தற்போது மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்த திடீர் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய் தலைமையிலான புதிய அரசு அமைவதற்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்தியுள்ளது.
மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…
தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…
நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…
அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…