தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வேளையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், புஷ்பா பட பாணியில் “புது சோஃபா போகுது, அதன்பின்னாடியே புது முதல்வர் போகிறார்” என்று குதிரை பேரக் குற்றச்சாட்டை முன்வைத்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்தச் சர்ச்சை குறித்து ஏற்கனவே விளக்கமளித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், விசிக அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட சோஃபாக்கள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டது என்றும், இது விஜய்க்காக வாங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டது விசிக அலுவலக சோஃபாவை அல்ல, அதிமுகவில் உருவாகியுள்ள புதிய அணி அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறித்தே அவர் பேசினார் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் இந்த சோஃபா விவகாரம் தொடர்ந்து கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த விவகாரத்திற்கு விசிகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் மிகக் காட்டமான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், விசிகவின் அம்பேத்கர் திடல் அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், அலுவலகப் பயன்பாட்டிற்காகவே புதிய சோஃபாக்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், திருமாவளவனைச் சந்திக்க வரப்போகிறார் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் இந்த சோஃபாக்கள் வந்ததால், அதைக் கிண்டல் செய்தது தரம் தாழ்ந்த மற்றும் தரங்கெட்ட அரசியல் என்று விசிக கடுமையாகச் சாடியுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், கோடிக்கணக்கில் சொத்துக்களும் ஆடம்பர பங்களாக்களும் வைத்திருப்பவர்களைக் கேள்வி கேட்காத இந்தச் சமூகம், எளிய மக்களுக்காக இயங்கும் ஒரு கட்சி சாதாரண சோஃபா வாங்குவதையும், ஷூ போடுவதையும் கூட அரசியலாகப் பார்ப்பது வேடிக்கையானது என்று விசிக குமுறியுள்ளது. “அப்படியே கழிப்பறையில் இருக்கும் பக்கெட், விளக்குமாறு எல்லாத்தையும் கணக்கெடுத்துட்டு போங்க” என்று மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ள விசிக, ஒரு கட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதைக் கூட அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியல் நாகரீகம் அல்ல என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…