நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்,மீனாட்சி சௌத்ரி ஆகியோர் லீட் கேரக்டரில் நடித்து கடந்த மாதம் 14ஆம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியான திரைப்படம் தான் வஸ்துனாம். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். பொங்கல் கொண்டாட்டமாக இவருடைய மற்றொரு படமான கேம் சேஞ்சர் படமும் வெளியானது. அந்த படம் வசூலில் சொதப்பிய நிலையில் வஸ்துனாம் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது . கடந்த இரண்டு வாரங்களில் இந்த படத்தில் வசூலானது 300 கோடி ரூபாயை தாண்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் காதலிக்கும், மனைவிக்கும் இடையில் சிக்கி தவிக்கும் கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளார் வெங்கடேஷ். முன்னாள் போலீஸ் அதிகாரியாக வெங்கடேஷ் கடத்தப்பட்ட தொழிலதிபரை காக்கும் ஆபரேஷன் கையில் எடுப்பதாகவும், இந்த படத்தின் கதை நகர்கிறது. இந்த நிலையில் இந்த படம் கடந்த இரண்டு வாரங்களில் 300 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான கலெக்ஷனை பெற்றுள்ளது. இதனை படக் குழுவினர் கொண்டாடியுள்ளார்கள்.
இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் வெங்கடேஷ், ஐஸ்வர்ய ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவும் கலந்து கொண்டார்கள். படத்தில் பல சுவாரசியங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். இதனை அடுத்து இவர்கள் அனைவரும் சேர்ந்து படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…