Categories: சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் நடந்த வரலக்ஷ்மி பூஜை… கலந்து கொண்ட பிரபலங்கள்… வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில்  தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து கலைஞர்  தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனித்துவமான கதாபாத்திரங்களில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பர்ஹானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். நேற்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வீட்டில் வரலக்ஷ்மி பூஜை செய்துள்ளார். இதில் நடிகை சினேகா, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் மனைவி சைந்தவி மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

2 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

2 minutes ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

5 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

6 minutes ago

“கண்ணை மூடு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்”… காதலியின் பேச்சை நம்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. பெங்களூரை நடுங்க வைத்த சம்பவம்…!

பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

9 minutes ago

வாக்காளர்களைத் தொந்தரவு செய்தா தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்… அமித் ஷாவின் அதிரடி ‘வார்னிங்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…

9 minutes ago