“அப்போ ஸ்டாலின் சட்டையைக் கிழிச்சாங்க… ஆனா இப்போ?”…. சட்டசபை ரகசியத்தை உடைத்த அமைச்சர் வன்னியரசு….!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தில், தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்குச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சட்டப்பேரவையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் வன்னியரசு, “ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது என்பது புதிய முயற்சியல்ல; முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முன்னெடுத்த திட்டத்தின் தொடர்ச்சியே இது. தற்போதைய தலைமைச் செயலகம் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வாடகைக்குச் செயல்பட்டு வருகிறது. வளர்ச்சிக்கான கடன் என்பது ஒரு தடையல்ல, நாட்டின் அனைத்து மாநிலங்களும் கடனில்தான் இயங்குகின்றன. எனவே, தமிழ்நாட்டிற்கு எனத் தனி தலைமைச் செயலகம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து விமர்சித்த அவர், “சினிமாவிலிருந்து வந்து சட்டமன்றத்திற்குச் செல்ல ஆசைப்பட்ட சீமானை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெறுப்பு அரசியலையும் வன்மத்தையும் விதைத்து வரும் அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். தந்தை பெரியாரையே விமர்சித்தவருக்கு அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. அதேவேளையில், சட்டப்பேரவையின் செயல்பாடுகள் தற்போது மிகவும் ஆரோக்கியமாக நடைபெற்று வருகின்றன. முந்தைய காலங்களில் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டை கிழிக்கப்பட்டது போன்ற அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, தற்போது நாகரிகமான விவாதங்கள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் மின் தட்டுப்பாடு இனி ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், “ஒன்றிய அரசின் FCRA சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 25-ஆம் தேதி ‘தாய்மாமன் சீர் திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. வரும் இடைத்தேர்தலில் அதிமுகவிலிருந்து த.வெ.க-விற்குச் சென்றவர்களே போட்டியிடுவதால், எங்களது மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago