நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை படம் படையப்பா. இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக மிரட்டலான வில்லி கேரக்டரில் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் சௌந்தர்யா லட்சுமி மணிவண்ணன் செந்தில் நாசர் அப்பாஸ் என பலர் படத்தில் நடித்திருந்தனர்.
படையப்பா படத்தில் ரஜினியின் 2 மகள்களில் ஒருவராக ப்ரீத்தா விஜயகுமார் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை வனிதா விஜயகுமார் தான். இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் ஒரு நேர்காணலில் கூறுகையில், படையப்பா படத்தில் முதலில் ரஜினியின் மகளாக நடிக்க இருந்தது நான்தான். ஆனால் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.
அதன் பின்புதான் என் தங்கை ப்ரீத்தாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவள் ரஜினிக்கு மகளாக நடித்து இருந்தாள். படையப்பா படத்தின் கதை கேட்டபோது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை. ரஜினிக்கு ஜோடியாக ஹீரோயின் ரோலில் நடிக்க கூப்பிட்டிருந்தால் ஒருவேளை நான் நடித்திருப்பேன் என்று வனிதா விஜயகுமார் அதில் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…