Categories: சினிமா

சுப முகூர்த்ததிற்கு தேதி குறிச்சாச்சு… திருமண கோலத்தில் வனிதா விஜயகுமார்- ராபர்ட் வெளியிட்ட அறிவிப்பு…

Spread the love

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகை தான் வனிதா விஜயகுமார். இவரது தத்தை மூத்த நடிகர் விஜயகுமார் மற்றும் தாயார் நடிகை மஞ்சுளா ஆவார். 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார்.

அதைத்தொடர்ந்து மாணிக்கம், தேவி, நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு, ஜெயா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஆனாலும் எதிலும் இவர் பெரிதாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலமாக ஆனார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாவற்றிற்கும் சண்டையிட்டு வத்திக்குச்சி வனிதா என்று பெயர் வாங்கும் அளவுக்கு புகழ் பெற்றார் வனிதா விஜயகுமார்.
அதைத் தொடர்ந்து தயாரிப்பு இயக்கம் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வந்தார் வனிதா விஜயக்குமார். கடந்த ஆண்டு இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு ஜோவிகா விஜயகுமார் வனிதா விஜயகுமார் இருவரும் இணைந்து ஒரு படம் தயாரித்து இயக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி ஜோவிகா விஜயகுமார் தயாரித்து வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி நாயகியாக நடித்த திரைப்படம் தான் Mr & Mrs. இந்தப் படத்தில் நாயகனாக ராபர்ட் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த அப்போவே வனிதா என்ன மறுபடியும் திருமணம் செய்ய போகிறாரா என்று நெட்டிசன்கள் பேசி வந்தனர்.

இப்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது. அதற்காக சுபமுகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு என்ற கேப்ஷன் உடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் போஸ்டரை பகிர்ந்து இருக்கிறார் வனிதா விஜயகுமார். இந்த போஸ்டரில் ராபர்ட் மற்றும் வனிதா விஜயகுமார் திருமண கோலத்தில் இருக்கின்றனர். ரசிகர்கள் அவர்களுடைய வாழ்த்துக்களை வனிதா விஜயகுமாருக்கு கமெண்ட்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

8 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

10 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

14 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

16 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

29 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

32 minutes ago