தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடைபெற்ற நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், “நான் சுயமாக உருவான கலைஞன் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டவன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்தக் கருத்தை முற்றிலும் மறுத்துள்ள பிரபல சினிமா பத்திரிகையாளரான வலைபேச்சு பிஸ்மி, அளித்த பேட்டி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியுள்ள பிஸ்மி, “உண்மையைச் சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் செல்ஃப் மேட் ஸ்டாரும் கிடையாது, பீப்பிள் மேட் ஸ்டாரும் கிடையாது; அவர் ஒரு ஆர்.டி. ராஜா மேட் ஸ்டார்” என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் செகண்ட் ஹேண்ட் கார் ஓட்டிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு, அவரை ஒரு பெரிய ஸ்டாராகக் காட்ட வேண்டும் என்பதற்காக அன்றைய காலகட்டத்திலேயே ரூ.40 முதல் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை வாங்கிக் கொடுத்தது ஆர்.டி. ராஜாதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலைக்காரன் படம் மற்றும் முன்னணி நடிகர்-நடிகைகளை வைத்து சிவகார்த்திகேயனின் தகுதிக்கு மீறிய மார்க்கெட்டை டிசைன் செய்ததே ஆர்.டி. ராஜாதான் எனவும், மனசாட்சி இருந்தால் சிவகார்த்திகேயன் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் பிஸ்மி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…