“அடுத்த ஆட்டம் தயார்”…. திமுகவில் இணைந்த கையோடு ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த வைத்திலிங்கம்…. அதிர்ச்சியில் அறிவாலயம்….!

Spread the love

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணியின் முக்கியத் தூணாக விளங்கியவருமான ஆர்.வைத்திலிங்கம் சமீபத்தில் திமுகவில் இணைந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சோழ மண்டல தளபதி’ என்று அழைக்கப்பட்ட இவர், ஓபிஎஸ் அணியில் நிலவிய முடிவெடுக்க முடியாத சூழல் மற்றும் அரசியல் எதிர்காலம் கருதி, தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். நீண்ட காலம் அதிமுகவின் கோட்டையாக இருந்த ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த அவர், திமுகவில் இணைந்த கையோடு தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மாற்றத்தைக் காட்டுகின்றன. உடல்நிலை பாதிப்பு மற்றும் வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால், வரவிருக்கும் தேர்தலில் அவர் நேரடியாகக் களம் காண வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரத்தநாடு தொகுதியை தனது மூத்த மகன் பிரபுவுக்கு பெற்றுத்தரும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு திமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வைத்திலிங்கம் சுமார் 19 ஆண்டுகளுக்கு மேலாக ஒரத்தநாடு தொகுதியின் பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு திமுகவிடம் தோல்வியடைந்ததைத் தவிர, மற்ற அனைத்து தேர்தல்களிலும் இத்தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் திமுகவுக்கு மாறியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட ஒரத்தநாட்டை தனது மகனின் வெற்றி மூலம் திமுகவின் கோட்டையாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் நகர்வு டெல்டா மாவட்ட அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

8 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

8 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

8 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

8 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

8 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

8 மணத்தியாலங்கள் ago