#image_title
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தானாம். இந்த தகவலை அப்படத்தின் இயக்குனர் எழில் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் காதல் பின்னணி கொண்ட பீல் குட் திரைப்படங்களில் அதிகம் நடித்து வந்தார். அதிலும் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த திரைப்படம் தான் துள்ளாத மனமும் துள்ளும்.
சில்வர் ஜூப்ளிக் கொண்டாடிய இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது வடிவேலு தானாம். நான் 1999 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த திரைப்படம் விஜய்க்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானதே இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான். இப்படத்தை இயக்குனர் எழில் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் மணிவண்ணன், தாமு, பொன்னம்பலம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் பேவரிட் என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம் சார்பாக ஆர்பி சௌத்ரி தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக வடிவேலு தான் நடிக்க இருந்தாராம். இது குறித்து சித்ரா லட்சுமணன் உடன் பேட்டியில் பேசியிருந்தார். அதில் இந்த திரைப்படத்தின் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறினேன். ஆனால் ஹீரோயினுக்கு கண் தெரியாது என்று கூறியதும் பலரும் இப்படத்திலிருந்து பின்வாங்கி விட்டார்கள்.
ஒரு முறை வடிவேலுவை சந்தித்தபோது படத்தின் கதையை கூறினேன். அவர் கேட்டதும் நான் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒப்புக்கொண்டார். அவரே ஒரு சில தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறினார். பின்னர் என்னது நண்பர்கள் பலரும் இந்த படத்தை பிரபல நடிகர்களை வைத்து இயக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதன் பிறகு தான் குட் பிலிம்ஸ் ஆர்பி சௌத்ரியுடன் கதையை கூறி, ஓகே சொன்ன பிறகு தான் விஜயின் கால்ஷீட் அவர்கள் வாங்கி கொடுத்தார்கள் என்று அவர் பேசியிருந்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…