தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழும் பி. வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை தற்போது பி வாசு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதனைப் போலவே சந்திரமுகி ரோலில் பாலிவுட் நடிகையான கங்கணா ரனாவத் நடித்துள்ள நிலையில் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன் மற்றும் சிருஸ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அதில் வேட்டையின் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் மிரட்டியுள்ளார். இந்த போஸ்டருடன் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 திரைப்படம் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளிவந்தது. இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையில் சந்தரமுகியின் “ரா ரா” பாணியில் தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த ஸ்வாகத்தாஞ்லி பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடி இருந்தார். கலா மாஸ்டர் நடன இயக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு பேசியுள்ள டப்பிங் வீடியோவை தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், நகைச்சுவையாக ‘சந்திரமுகி 1, 2, 3 ஏன் 10 பார்ட் வந்தாலும், நான்தான்டா சந்திரமுகியோட best friend’ என பேசியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…