Categories: சினிமா

அவங்க வாழ்ற வாழ்க்கை வேற.. அவர் கதை எல்லாமே புதுசா இருக்கும்.. மாரி செல்வராஜ் பற்றி பேசிய அசிஸ்டன்ட் டைரக்டர் சரண்யா..!

Spread the love

பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில் வாழை படத்தில் வேலை பார்த்த அசிஸ்டன்ட் டைரக்டர்கள் மாரி செல்வராஜுடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்கும் சரண்யா என்பவரிடம் ஏன் மாரி செல்வராஜ் சாரிடம் அசிஸ்டண்டாக வேலைக்கு சேர்ந்தீர்கள்? அதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சரண்யா நான் ஆரம்பத்தில் இருந்து சினிமா பார்த்து தான் வளர்ந்தேன். வீட்ல தனியா தான் இருப்பேன். எப்போதும் சினிமா தான் பார்ப்பேன்.

 

பார்க்க பார்க்க ஒரு ஆசை வந்துச்சு. நம்மளும் இது மாதிரி கதை சொல்லலாம் அப்படின்னு ஒரு ஆசை வந்துச்சு. ஸ்கூல்லயும் டிராமா அது இதுன்னு நிறைய கலந்துபேன். அதுக்கப்புறம் இதுதான் பண்ணனும்னு முடிவு எடுத்தேன். மாரி செல்வராஜ் சார் கிட்ட ஜாயின் பண்ணது எனக்கு ஒரு போனஸ் தான். காலேஜ் முடிச்ச உடனே எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கேயாவது உள்ள போயிட்டு சினிமாவை கத்துக்க மாட்டோமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

இவர்கிட்ட ஜாயின் பண்ணது சந்தோஷம்தான். முதல்ல சார் கிட்ட பேசும் போது எனக்கு 22 வயசு இருக்கும். அப்போ அவரு அனுபவத்தை பத்தி சொன்னாரு. அவரு இவ்வளவு பார்த்து இருக்காரா அப்படின்னு தோணுச்சு. நான் சென்னையில வளர்ந்த பொண்ணு. எனக்கு அந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. அவர் வாழ்க்கை ரொம்ப புதுசா இருந்துச்சு. அவர் சொன்ன கதைகள், அவர் ஷேர் பண்ண அனுபவம் எல்லாமே புதுசா இருந்துச்சு. அவங்க அங்க இருந்து வந்துருக்காங்க. அப்போ இவங்களோட கதை எப்படி இருக்கும்ன்னு கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்துச்சு என கூறியுள்ளார்.

admin

Recent Posts

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

8 minutes ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

19 minutes ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

48 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

52 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

1 மணத்தியாலம் ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

1 மணத்தியாலம் ago