இன்றைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்வு என்பது பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது. அதனால் பலரும் தலைக்கு பலவிதமான பொருள்களை பயன்படுத்துகிறார்கள். அதன்படி பலரும் தலைமுடிக்கு வெங்காயச்சாறு பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையிலேயே இது தலைக்கு பயன்படுத்தப்படுவது நல்லதா என்பதை யாரும் சிந்தித்துப் பார்த்து இருக்க மாட்டார்கள். வெங்காயச் சாறு உங்களுக்கு ஒரு நல்ல வீட்டு மருந்தாக இருக்கலாம். இது ஒரு மாயாஜால சிகிச்சை கிடையாது.
ஆனால் சரியான மற்றும் வழக்கமாக பயன்படுத்தினால் பலருக்கு நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான முடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வெங்காய சாற்றின் கடுமையான வாசனை காரணமாக பலரும் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். இப்படி வாசம் பிடிக்காதவர்கள் அந்த வெங்காயச் சாறுடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கலாம். முடி உதிர்தலின் தொடக்கத்தில் இதனை பயன்படுத்தி தொடர்ந்து செய்து வந்தால் சிறந்த பலன்களை பெற முடியும். உங்களுடைய முடிவேறுகள் மற்றும் உச்சந்தலையில் வெங்காயச் சாற்றை தடவி நன்றாக மசாஜ் செய்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
வெங்காயச் சாற்றில் சல்பர் நிறைந்துள்ளதால் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கும் முடி நுண்கலாய்களை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. இது முடி மீண்டும் வளரும் வாய்ப்பை அதிகரிக்கும். காலப்போக்கில் முடி வலுவடையும். மேலும் வெங்காயச்சாறு உச்சந்தலையில் தொற்று மற்றும் வீக்கத்தை குறைக்கின்றது. இது முடி வளர்ச்சியை தடுக்கும். இப்போதெல்லாம் மக்கள் வெங்காயச் சாற்றை தேங்காய் எண்ணெய், பச்சை தேன், ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கற்றாழை ஆகியவற்றுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள்.
இந்த பொருள்களை இணைப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும், முடியை மேலும் வலுப்படுத்தும், ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கவும், சல்பர், ஆக்சிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இல்லாததால் ஏற்படும் முடி உதிர்வை குறைக்கவும் உதவுகின்றது. இருந்தாலும் வெங்காயச் சாற்றின் கடுமையான வாசனை காரணமாக பலரும் இதனை தவிர்க்கிறார்கள். சரியான முறையுடன் இந்த வாசனையை கணிசமாக குறைக்க முடியும்.
தலைக்கு வெங்காயச்சாறு பயன்படுத்த நினைத்தால் அதற்கு நீங்கள் ஒன்று முதல் இரண்டு வெங்காயத்தை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும். பிறகு ஒரு துணி அல்லது சல்லடை பயன்படுத்தி சாற்றை வடிகட்ட வேண்டும். இந்தச் சாற்றை உங்கள் முடிவேறுகள் மற்றும் உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 1 முதல் 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். பிறகு உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் கரைந்து வலுவான கூந்தல் உங்களுக்கும் கிடைக்கும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…