“இந்தியர்களே வெளியேறுங்கள்”… இப்போ கிளம்பினால் பணம்.. இல்லையென்றால் சிறை… தாஜ்மஹால் படத்தை போட்டு அமெரிக்கா விரிக்கும் வலை…!

Spread the love

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரைத் தங்களது நாடுகளுக்கே தானாக முன்வந்து திரும்பிச் செல்ல ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ‘புராஜெக்ட் ஹோம்மிங்’ (Project Homecoming) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ‘CBP Home’ என்ற பிரத்யேகச் செயலி (App) மூலம் சுய நாடு கடத்தலுக்கு (Self-Deportation) பதிவு செய்யும் நபர்களுக்கு இலவச விமான டிக்கெட் மற்றும் 2,600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 2.15 லட்சம் ரூபாய்க்கும் மேல்) ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் மாத விடுமுறை காலத்தில் இந்தத் தொகை தற்காலிகமாக 3,000 டாலராக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தைப் விளம்பரப்படுத்த அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள போஸ்டர்களில் இந்தியாவின் அடையாளமான தாஜ்மஹால், சீனாவின் பெருஞ்சுவர் போன்ற படங்களைப் பயன்படுத்தி அந்தந்த நாட்டு மக்களைக் குறிவைத்துள்ளது. கட்டாயமாக நாடு கடத்தப்படும்போது எதிர்கொள்ளும் கைது நடவடிக்கைகள், சிறைவாசம் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்படும் நிரந்தரத் தடைகளைத் தவிர்க்க இந்தத் திட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக, தானாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு பழைய அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படுவதோடு, எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்கா வர விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஓரளவிற்குப் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் இருக்கும் தீவிரமான குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. ஒரு நபரை வலுக்கட்டாயமாக நாடு கடத்த அமெரிக்க அரசுக்கு சுமார் 18,000 டாலர்கள் வரை செலவாகிறது. ஆனால், இந்தச் செயலி மூலம் அவர்கள் தாங்களாகவே வெளியேறும்போது அரசுக்குச் சுமார் 5,000 டாலர்கள் மட்டுமே செலவாகும் என்பதால், வரி செலுத்துவோரின் பணம் பெருமளவில் மிச்சப்படுத்தப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் தெரிவித்துள்ளார். 2025 ஜனவரி முதல் இதுவரை சுமார் 22 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தத் திட்டம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மஹால் போன்ற கலாச்சாரச் சின்னங்களை நாடு கடத்தும் விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவது அந்த நாட்டு மக்களை இழிவுபடுத்தும் செயல் என்றும், இது ஒரு கவர்ச்சிகரமான “பொறி” (Trap) என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. ஒருமுறை இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேறினால் மீண்டும் அமெரிக்கா திரும்புவது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும், சட்ட நுணுக்கங்கள் தெரியாத ஏழை மக்களை இந்தத் திட்டம் தவறாக வழிநடத்துவதாகவும் குடியேற்ற ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

5 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

13 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

22 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

3 மணத்தியாலங்கள் ago