உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள் இருக்கும் நீண்டகாலப் பகையைத் தற்காலிகமாக மறந்து, அமெரிக்காவும் ஈரானும் ஒரு “இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில்” (Interim Peace Agreement) கையெழுத்திடத் தயாராகிவிட்டதாகத் பிரத்தியேகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உச்சத்தில் இருந்த சூழலில், இன்னும் 24 மணி நேரத்திற்குள் இரு நாட்டுத் தலைவர்களும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரே நேரத்தில் வெளியிடவுள்ளது உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
திரைக்குப் பின்னால் நடந்த இந்த அதிரடிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் தூதரக அதிகாரிகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பாலமாக இருந்து தூது நடந்துள்ளனர். வார இறுதியில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த மிக முக்கியமான கூட்டத்தில், இந்த அமைதி ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி ஆகிய இரு தரப்பிலும் உள்ள மிக முக்கியப் பொறுப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இதன் சட்டப்பூர்வ அம்சங்களை வகுக்க, அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ், வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் சிறப்புப் பிரதிநிதி ஜாரெட் குஷ்னர் ஆகியோர் களமிறங்கி இந்த பொதுவான முடிவை எட்டியுள்ளனர்.
தற்போது கையெழுத்தாகப் போகும் இந்த ஒப்பந்தம் என்பது ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல; இது உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு, அமைதியாகப் பேசுவதற்கான ஒரு தற்காலிக “நோக்கக் கடிதம்” (Letter of intent) ஆகும். இதன் முக்கிய நிபந்தனையின்படி, அடுத்த 30 முதல் 60 நாட்களுக்கு இரு நாடுகளும் எந்தவித மோதலிலும் ஈடுபடக் கூடாது. இந்த அமைதிக் காலத்தில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியப் பாதையாக இருக்கும் “ஹார்முஸ் நீரிணை” (Strait of Hormuz) பகுதியை எந்தவிதக் கட்டணமோ அல்லது தடைகளோ இல்லாமல் பன்னாட்டு வணிகக் கப்பல்களின் போக்குவரத்திற்காக ஈரான் திறந்து வைக்க வேண்டும். இதற்குப் பிரதிபலனாக, முடக்கப்பட்டுள்ள ஈரானின் சில வங்கிச் சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக அனுமதியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த 30 முதல் 60 நாட்களுக்கு இடைப்பட்ட தற்காலிக அமைதிக் காலத்தைப் பயன்படுத்தி, இரு நாடுகளின் அதிகாரிகளும் நேரில் அமர்ந்து மிகவும் சிக்கலானப் பிரச்சனைகளான ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிரந்தர முடிவுகளைப் பேசித் தீர்க்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் புதுடெல்லியில் இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும், “இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன, எந்த நேரத்திலும் பெரிய செய்தி வரலாம்” என்று இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இரு தரப்பிலும் இருக்கும் தீவிரப் போக்காளர்கள் கடைசி நேரத்தில் ஏதேனும் முட்டுக்கட்டைப் போடாத வரை, அடுத்த 24 மணி நேரத்தில் வெளியாகப்போகும் இந்த அறிவிப்பு மேற்காசியப் போருக்கு ஒரு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கும் என்று உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…
பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…
"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…