#image_title
முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி கடந்த 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவர் 300 படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் மூன்று முடிச்சு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1976-ஆம் ஆண்டு மூன்று முடிச்சு படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர். கடந்த 1974-ஆம் ஆண்டு கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் ரிலீஸ் ஆன ஓ சீத கதா திரைப்படத்தின் மறு உருவாக்கம் தான் மூன்று முடிச்சு திரைப்படம்.
எம்.எஸ் விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மூன்று முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவிக்கு 16 வயது தான். இந்த படத்தில் கமலஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
16 வயது இருக்கும்போதே மூன்று முடிச்சு படத்தில் நடித்த ஸ்ரீதேவிக்கு காதல் காட்சிகள் நடிக்க தயக்கம் இருந்துள்ளது. அப்போது Bobby, Geet Gaata Chal ஆகிய படங்களை பார்த்துவிட்டு மூன்று முடிச்சு படத்தின் காதல் காட்சிகளில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. இதனை ஸ்ரீதேவியே பல நேர்காணல் நிகழ்ச்சியில் கூறி இருப்பதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகள் ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…