மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற அதிரடி நடவடிக்கையில் ஒரே வாரத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அரசியல் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன.
இது குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட சுமார் 50 உயர் அதிகாரிகள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்தும் பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், ஈரான் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகச் சரணடைய வேண்டும் என்றும், அதன் பிறகே பேச்சுவார்த்தைகள் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு 151 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஈரானில் புதிய தலைமை உருவாகும் வரை இந்த ராணுவ நடவடிக்கைகள் ஓயாது என்ற சூழல் நிலவுவதால் இப்பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் தொடர்கிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…