மும்பை அந்தோப் ஹில் பகுதியில் வசித்து வந்த 24 வயது மருத்துவ மாணவி ஸ்துதி சோனவனே, தனது காதலனின் டார்ச்சரால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன் அவர் எழுதிய 6 பக்க உருக்கமான கடிதத்தில், தனது காதலன் எப்போதும் சந்தேகப்பட்டுத் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது காதலனின் மோசமான குணத்தைப் பார்த்துப் பயந்த நண்பர்கள் பலர், “கவனமாக இரு, இல்லையென்றால் நீயும் டெல்லி இளம்பெண் ஸ்ரத்தா போல பிரிட்ஜிற்குள் பிணமாகக் கிடைக்கப் போகிறாய்” என முன்பே எச்சரித்திருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனது காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும், தொடர் அவமானங்களாலும் மனம் உடைந்த ஸ்துதி, இறுதியில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது காதலனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் அலைபேசி உரையாடல்கள் மற்றும் கடிதத்தின் அடிப்படையில் இது தற்கொலைக்குத் தூண்டிய வழக்கா என ஆய்வு செய்து வருகின்றனர். மாணவி தனது வாழ்வை முடித்துக் கொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…