“அத பண்ண சொல்லி எந்த ஜோசியர் சொன்னாரு?”…. முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய உதயநிதி…. மேடையில் செம கிண்டல்….!

Spread the love

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் 4 மாத கால ஆட்சியை ஆதாரங்களுடன் கடுமையாக விமர்சித்துப் பேசினார். முதல்வராகப் பொறுப்பேற்ற போது “திமுக அரசு கஜானாவை முழுமையாகத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டது” என்று கூறிய விஜய், தற்பொழுது ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதாக அறிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

குறிப்பாக, கடற்கரையைப் பார்த்தவாறு புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பைக் கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின், “கடலை பார்த்தவாறுதான் தலைமைச் செயலகம் இருக்க வேண்டும் என்று விஜய்க்கு எந்த ஜோசியர் சொன்னாரோ தெரியவில்லை” என்று சாடினார். மேலும், நிதி பற்றாக்குறை நிலவுவதாகக் கூறிவிட்டு, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்ததன் பின்னணியில் உள்ள முரண்பாட்டைக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். அரசின் இந்த ஆடம்பர முடிவுகளுக்கான நிதி எங்கிருந்து வந்தது என்பதற்கு முதல்வர் விஜய் மக்களிடம் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகளின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் வரை, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித புதிய காரும் தேவையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறுதியிட்டுச் கூறிவிட்டதை உதயநிதி சுட்டிக்காட்டினார். திமுகவின் இந்தத் திடீர் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் மற்றும் பாமக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் புதிய கார்களை மறுத்து அறிவிப்பு வெளியிட்ட சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்தார். விஜய்யின் இந்த ஆடம்பரக் கொள்கைகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தவெக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்து மோசமான நிலையை எட்டியுள்ளது என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், தொடர் தோல்வி பயத்தினாலேயே தவெக தலைவர் விஜய் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மீண்டும் மீண்டும் விஜயம் செய்து வருகிறார் என்றார். விஜய்யின் ஜோசிய நம்பிக்கை, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை மையமாக வைத்து உதயநிதி மேற்கொண்ட இந்தச் சூறாவளிப் பிரச்சாரம், திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எப்போ ஜாயின் பண்றீங்க?… என்று கேட்டுவிட்டு… மறுநாளே வந்த ரிஜெக்ஷன் மெயில்… நிராகரிக்க வேண்டுமென்றால் ஏன் பொய்யான நம்பிக்கை தர வேண்டும்?… இளைஞர் குமுறல்… இணையத்தில் வைரல் வீடியோ…!!

ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர், தனக்கு நேர்ந்த கசப்பான வேலை நேர்காணல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். நேர்காணலின் முடிவில் நிறுவனத்தின் பிரதிநிதி…

2 minutes ago

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

10 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

10 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago