அடுத்த பரபரப்பு… விஜய் கூட்டணியில் இணையும் TTV, OPS… அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அதிமுக மற்றும் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளார். அதே சமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ அவர் கூட்டணி வைக்காமல் தனியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் நேற்று முன்தினம்  நாஞ்சில் விஜயன் கட்சியின் இணைந்தார். இதனால் விஜய்க்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைவார்கள் என கூறப்படும் நிலையில் அது குறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய அவர், இதற்கு அனைவரும் ஒன்று திரண்டு ஆதரவளிக்க வேண்டுமென டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ்-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Nanthini

Recent Posts

“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும்…

58 seconds ago

“என் ஆசை நிறைவேறல..” ஆனால் விடமாட்டேன்… கோவையில் பிரதமர் மோடி உருக்கம்..!!

கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…

5 minutes ago

“நடுக்கடலில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு…. ஈரானுக்கு இந்தியா கொடுத்த மரண அடி வார்னிங்… டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்….!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…

5 minutes ago

ITI, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்… ₹74,000 வரை சம்பளம்… பவர் கிரிட் நிறுவனத்தில் 660 பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

6 minutes ago

ஈரான் கடலில் பதற்றம்… இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு?… நடுக்கடலில் ‘யூ-டர்ன்’ போட்ட 4 கப்பல்கள்…. என்ன நடந்தது…?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…

9 minutes ago

“அழிஞ்சு போயிரும் பாத்துக்கோங்க” இதை நான் சொன்னா நம்ப மாட்டாங்க… சீனாக்காரன் சொன்னா நம்புவாங்க… சீமான் காட்டம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…

10 minutes ago