#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் புகழின் உச்சியில் இருந்த போதும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு காரணம் நான் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் அதனால் நான் அரசியல் கட்சியை தொடங்குகிறேன் என்று அறிவித்தார்.
அதன்படி அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்து கட்சியின் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டில் நடத்தி முடித்து இருக்கிறார் விஜய். ஏராளமான தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பல நற்பணிகளை செய்து வருகின்றனர். பொதுப்பணிகளை செய்து வருகின்றனர். வயது முதிர்ந்தோருக்கு உணவளிப்பது குழந்தைகளுக்கு பால் வழங்குவது முட்டை பிஸ்கட் போன்றவர்களை வழங்குவது என பல பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். இது மாட்டுமல்லாமல் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தானமும் செய்கின்றனர்.
இந்நிலையில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் மக்களுக்கு இலவச உணவுகளை வழங்கி வந்தனர். இதற்கு முறையான அனுமதி வாங்கிக்கொண்டு அவர்கள் செய்தாலும் சமீபத்தில் அவர்கள் சேவை செய்ய போட்டிருக்கும் கூடாரத்தை மாநகராட்சி அலுவலர்கள் அதை நீக்கிவிட்டு இனிமேல் இந்த இடத்தில் செய்யக்கூடாது என்று கூறி இருக்கின்றனர். இதனால் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் வருத்தத்துடன் பேட்டி அளித்து இருக்கின்றனர்.
அவர்கள் கூறியது என்னவென்றால் நாங்கள் முறையாக அனுமதி பெற்று தான் இந்த பொது சேவையை ஆரம்பித்தோம். தற்போது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்ன காரணம் என்று சொல்லாமல் இந்த இடத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்படி செய்ததற்கு உண்மையான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…