“பெயரைக் கேட்டா சும்மா அதிருதுல்ல”… பிறந்த குழந்தைக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி வைத்த ஷாக்கிங் பெயர்…. விஜய்க்காக இப்படியொரு பிரம்மாண்ட நன்றிக்கடனா…?

Spread the love

சென்னை திரு.வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த எம்.ஆர்.பல்லவி, தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தனது கட்சியின் சுருக்கப் பெயரான ‘TVK’ (தமிழன் வெற்றி கொண்டான்) என்று பெயர் சூட்டப்போவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தலைவர் விஜய்யின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 36 வயதான பல்லவிக்கு, கடந்த தேர்தலில் திரு.வி.க நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். மகப்பேறு காலம் நெருங்கிய நிலையிலும், சற்றும் சோர்வடையாமல் தொகுதி முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் வீடு வீடாகச் சென்று அவர் மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்பு, தொகுதி மக்களிடையே பெரும் அனுதாபத்தையும் ஆதரவையும் தேடித்தந்தது.

சென்னை மாநகரின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான திரு.வி.க நகரில் நிலவிய பலத்த போட்டிக்கு இடையே, பல்லவி நிகழ்த்திய சாதனை அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தனக்கு எதிராகப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, இத்தொகுதியை தவெக-வின் கோட்டையாக மாற்றிக் காட்டினார் பல்லவி. தேர்தல் முடிவுகள் வெளியாகி அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது எம்.எல்.ஏ-வாகவும், அம்மாவாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் பல்லவி, தனக்கு அரசியல் முகவரியையும் அந்தஸ்தையும் வழங்கிய கட்சிக்கும், அதன் தலைவர் விஜய்க்கும் நன்றி செலுத்தும் விதமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார். ஆங்கில எழுத்துக்களான ‘TVK’ என்பதன் அர்த்தம் தமிழில் ‘தமிழன் வெற்றி கொண்டான்’ என்று அமையுமாறு தன் மகனுக்கு அவர் பெயர் சூட்டியுள்ளது, அக்கட்சியினரிடையே தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி..! டாஸ்மாக் கடைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறதா அரசு..? தலைமைச் செயலக ரகசிய திட்டத்தால் 25,000 ஊழியர்கள் பரிதவிப்பு..!!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக்…

3 minutes ago

மின்வாரிய தலைமையகத்தில் நள்ளிரவு சதி..? 10 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்.. சிசிடிவி-யை அலசும் போலீஸ்…!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய…

8 minutes ago

“என் கஷ்டமெல்லாம் தீர்ந்துரும்” நிலத்தை வித்து மகளை டாக்டருக்கு படிக்க வச்ச தந்தை… 25 வயதில் விளையாடிய விதி… கண்ணீர் விட்டு கதறும் தந்தை..!!

தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளுக்காகத் தங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் பெற்றோருக்கு, விதி சில நேரங்களில் மீளாத் துயரத்தையே…

10 minutes ago

ஒருபுறம் கொடூர தாக்குதல்… மறுபுறம் அமெரிக்காவுடன் ரகசிய பேச்சுவார்த்தை.. ஈரானில் நடப்பது என்ன..?

ஈரான் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அரசியல் மற்றும் ராணுவ மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம்…

18 minutes ago

“தேர்தல் முடிஞ்சி 1 மாசம் ஆச்சி… இன்னும் வந்து எட்டி கூட பாக்கல..” சொன்ன வாக்குறுதியை காப்பாத்தலையே.. CM விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தேர்தல் பரப்புரையின் போது, வெற்றி பெற்றால் தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன் என்று தமிழக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.…

24 minutes ago

திருச்சியில் கொடூரம்..! 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து… பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்…!!

திருச்சியில் தோழியைப் பார்ப்பதற்காகச் சென்ற 14 வயதுச் சிறுமி ஒருவருக்கு, ஓட்டுநர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை…

32 minutes ago