முதலமைச்சர் மாரத்தான் ஓடிய நேரத்தில் அமைச்சரின் வீடியோ லீக்… தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு…. அவரே அளித்த விளக்கம்….!

Spread the love

தமிழக தமிழக வெற்றிக் கழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஒரு பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி, தற்போது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டே, அமைச்சர் சரத்குமார் தனது மொபைல் ஃபோன் திரையின் மீது ஏதோ ஒரு வெள்ளை நிறப் பொருளைப் பொடியாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்ட அதே வேளையில், அவரது அமைச்சரவை சகாவின் இந்த வீடியோ தீயாகப் பரவி வருவது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் சரத்குமார் தரப்பில் உடனடியாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “அது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ. அப்போது எனது ஒன்றரை வயதுக் குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை விழுங்க முடியாமல் துப்பியது. அதனால்தான், அந்த மாத்திரையை ஃபோன் திரையில் வைத்துப் பொடியாக்கி, தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காக அப்படிச் செய்தேன். அத்தனை கேமராக்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இருக்கும் ஒரு திறந்தவெளி மைதானத்தில் யாராவது போதைப்பொருள் பயன்படுத்துவார்களா? அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வீடியோ தவறாகச் சித்தரிக்கப்படுகிறது” என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமைச்சரின் இந்த விளக்கம் நெட்டிசன்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘THUG LIFE MOMENT’ என்ற தலைப்புடன் பகிர்ந்த அந்த வீடியோவில், குழந்தையோ அல்லது குழந்தைக்கு மருந்து கொடுப்பது போன்ற காட்சிகளோ இல்லை என்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதோடு, “ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த, கூட்ட நெரிசல் மிக்க கிரிக்கெட் மைதானத்திற்கு யாராவது அழைத்துச் செல்வார்களா?” என்றும், “அப்படியே அழைத்துச் சென்றிருந்தாலும் வீடியோவில் ஏன் குழந்தை இல்லை?” என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்களும் கேள்விகளும் வலுத்து வருகின்றன.

Nanthini

Recent Posts

பார்க்கவே பதறுது…! தண்ணீருக்கு நடுவே மின்சார வேலை… நொடியில் தூக்கி வீசப்பட்டு இறந்த வாலிபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…

11 minutes ago

திக் திக்….! வெடித்து சிதறிய ட்ரான்ஸ்பார்மர்… தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நபர்…. தெறித்து ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தின் 3-வது நுழைவாயில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி…

25 minutes ago

பெட்ரோல் பங்க்கில் அராஜகம்…! கார் ஓட்டுனரை துடைப்பத்தால் அடித்து உதைத்த ஊழியர்கள்…. வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த…

31 minutes ago

பள்ளியா? பலிபீடமா?… கதறித் துடித்த மாணவர்கள்… தொட்டிக்குள் ஏற்பட்ட மர்மம்… மூச்சுத்திணறி பறிபோன 4 உயிர்கள்… பள்ளியில் நடந்த நெஞ்சை பிளக்கும் துயரம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் அருகே செயல்பட்டு வரும் மகரிஷி குருகுல் சமஸ்கிருத வித்யாலயாவில் இந்தத் துயரச் சம்பவம்…

31 minutes ago

“கை, கால்கள் இல்லாமல் சிதைக்கப்பட்டு…” ஆடையின்றி நாய்கள் கடித்து குதறி கிடந்த பெண்ணின் உடல்…. கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டாரா…? பகீர் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் நாபோல் காவல் எல்லைக்குட்பட்ட தட்டி அண்ணாரம் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகே, ஆடைகளின்றி…

38 minutes ago