திமுக, அதிமுக தலைவர்கள் ஊர் சுற்ற… திருச்செந்தூரில் ‘வேல்’ பிடித்த விஜய்… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்றிரவு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றடைந்தார். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிந்து பாரம்பரிய உடையில் வந்த விஜய்க்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ‘பூரண கும்ப மரியாதை’ அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் ‘வெற்றிவேல்’ வழங்கி கௌரவித்தது அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விஜய்யின் வருகையை முன்னறிந்து இன்று அதிகாலை 4 மணிக்கே திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டனர். தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், மக்கள் கூட்டம் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கருவறையில் சாமி தரிசனம் செய்த கையோடு, கடலோரப் பகுதிக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தினார்.

தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த வேளையில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் ஆன்மிகப் பயணம் மற்றும் ஓய்வில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலில் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாய்க்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதேபோல் அதிமுக நிர்வாகிகளும் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த அரசியல் சூழலில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்டுள்ள விஜய், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரைத் தேர்ந்தெடுத்து வழிபாடு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய்யுடன் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது மேலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வெற்றிக்காக ‘வெற்றிவேல்’ ஏந்தி விஜய் நடத்திய இந்தத் திடீர் வழிபாடு, அவரது தொண்டர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தவெக-வின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த மே 4-ஆம் தேதிக்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கும் வேளையில், விஜய்யின் இந்த ஆன்மிகப் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

2 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

2 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

2 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

3 மணத்தியாலங்கள் ago