தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான விஜய், சென்னையை உலகத்தரம் வாய்ந்த, தூய்மையான அதிநவீன நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், கட்சி நிர்வாகிகள் யாரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்களோ, போஸ்டர்களோ வைக்கக் கூடாது என மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மூலமும் இதற்கான எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களில் தவெக போஸ்டர்களும் பேனர்களும் குவிகின்ற விவகாரம், தலைவரின் உத்தரவு வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா என்ற பலத்த கேள்வியை சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் எழுப்பியுள்ளது.
இந்த விதிமீறல்களுக்குப் பின்னால், முதல்வரால் அடையாளப்படுத்தப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏவும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளருமான ஈசிஆர் சரவணன் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னை திருவான்மியூர், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் ஒட்டுமொத்த ஓ.எம்.ஆர் ஐடி காரிடார் பகுதிகள் முழுவதும் மேம்பாலத் தூண்கள், பொதுச் சுவர்கள், ஏன் தனிநபர்களின் வீட்டுச் சுவர்கள் கூட தப்பாத அளவிற்கு இவரது போஸ்டர் ஆக்கிரமிப்பு பொதுமக்களைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. கட்சித் தலைமை வகுத்த கட்டுப்பாடுகளை மாவட்டச் செயலாளரே மீறி செயல்படுவது தவெகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாக ஈசிஆர் சரவணன் பிரின்டிங் மற்றும் பேனர் டிசைன் தொழில் செய்து வந்தவர் என்பதால், இன்னும் அவர் அந்தத் தொழிலின் மோகத்தில் இருந்து வெளியே வரவில்லை என்றும், தலைவரின் கட்டளையை விடத் தனது விளம்பரமே முக்கியம் என நினைப்பதாகவும் உள்ளூர்வாசிகள் முணுமுணுக்கிறார்கள். தடை செய்யப்பட்ட இடங்களையும் விடுத்து, சென்னை மாநகரின் அழகைக் கெடுக்கும் வகையில் அரங்கேறி வரும் இந்த “போஸ்டர் அராஜகம்” குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனப் பதிவுகளைக் குவித்து வருகின்றனர்.
ஒருபுறம் சென்னையைத் தூய்மையான நவீன நகரமாக மாற்ற விஜய் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவரது சொந்தக் கட்சி எம்எல்ஏவே அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு நல்லதொரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. கட்சிக்கு உள்ளேயும் இந்த விவகாரம் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைவருக்குக் கட்டுப்படாத இந்த பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஈசிஆர் சரவணன் மீது முதல்வர் விஜய் எப்போது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்? என்பதே சென்னை மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…