“இது ஓட்டுக்கு பணம் இல்ல… ஆரத்திக்கு”…. கேமராவைப் பார்த்ததும் அலறிய தவெக நிர்வாகி…. மதுராந்தகத்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்….!

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிபாளையம் பகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, தேர்தல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

பரவி வரும் அந்த வீடியோவில், ரெட்டிபாளையம் பகுதியில் பிரசாரத்திற்கு வந்த தவெக நிர்வாகிகளுக்குப் பொதுமக்கள் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தனது மணிபர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அங்குள்ள மக்களுக்குத் தலா ரூ.500 வழங்குவது போலக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை யாரோ வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்த நபர், பதற்றமடைந்து, “இது வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணம் அல்ல, ஆரத்தி எடுத்ததற்காகக் கொடுக்கப்பட்ட பணம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், தங்களைத் தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் ‘தூய சக்தி’ எனக் கூறிக்கொள்ளும் தவெகவின் நிர்வாகிகளே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது அக்கட்சியினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் பிற அரசியல்கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த பணப்பட்டுவாடா குற்றச்சாட்டும் வீடியோ சர்ச்சையும் மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் களத்தில் மேலும் சூட்டைப் அதிகரித்துள்ளது.

Nanthini

Recent Posts

VS பாபு உண்மையிலேயே கவலைக்கிடமா?…. “சீக்கிரமே தேர்தல் வரும்” மாஃபா பாண்டியராஜன் கொளுத்திப்போட்ட வெடி…. அதிர்ச்சி தகவல்….!

கொளத்தூர் தொகுதி பிரதிநிதி வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட போதிலும்,…

7 minutes ago

“இனி வங்கிக் கணக்கு செல்லாது”… தமிழகம் முழுவதும் உதவித்தொகை நிறுத்தம்?…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மாதாந்திர உதவித்தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5-ஆம் தேதிக்குள்…

13 minutes ago

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

1 மணத்தியாலம் ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

1 மணத்தியாலம் ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

2 மணத்தியாலங்கள் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

2 மணத்தியாலங்கள் ago