மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யு.வி.எம்.ராஜராஜனின் தாயார் பானுமதி திடீரென காலமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் உச்சத்தில் இருந்தபோது, தனது மகனின் வெற்றிக்காகத் தனது கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளை அடகு வைத்து தேர்தல் செலவுக்குப் பணம் கொடுத்துப் பக்கபலமாக இருந்தவர் அவர். “நீ கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்” என மகனை உற்சாகப்படுத்திய தாய், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வருவதற்கு முன்பே உயிரிழந்தது ராஜராஜனை நிலைகுலையச் செய்துள்ளது.
போதிய பணபலம் இல்லாத நிலையிலும், தனது தாயின் தியாகத்தையும் மக்களின் ஆதரவையும் நம்பி ராஜராஜன் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இறுதி அஞ்சலியின் போது தனது தாயின் உடல் அருகே அமர்ந்து, “எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு இப்போது வெறுமையாகக் கிடக்கிறாரே” என அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிளப்பப்பட்ட அவதூறுகளைத் தாண்டி, தனது தாயின் ஆசியுடன் தேர்தல் முடிவுகளில் அதிசயம் நடக்கும் என்றும், மக்கள் தன்னை கைவிடமாட்டார்கள் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…