தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தவெக வேட்பாளர் சத்யபாமா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், “சென்ற தேர்தலில் நான் ரூ.31 கோடி செலவு செய்தேன்” என்று அவர் கூறியிருப்பது பொதுமக்கள் மற்றும் தேர்தல் களம் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சத்யபாமா, அது முற்றிலும் சித்தரிக்கப்பட்ட போலியான வீடியோ எனக் கூறி சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ₹45 லட்சம் வரை மட்டுமே செலவிட அனுமதியுள்ளது. ஆனால், அந்த வரம்பை விட பன்மடங்கு அதிகமாக செலவழித்ததாக அந்த வீடியோ உரையாடலில் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணைய வரம்பை அப்பட்டமாக மீறும் வகையிலான இந்த பேச்சு குறித்து முறைப்படி புகார் அளிக்கப்பட்டால், சத்யபாமாவின் வேட்புமனு தகுதி மற்றும் சட்டரீதியான நடவடிக்கை தொடர்பாகக் கடுமையான சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த வீடியோ விவகாரத்தின் பின்னணியில் தவெக உட்கட்சிப் பூசலே பிரதான காரணமாக அமைந்திருப்பதாகத் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 பொதுத்தேர்தல் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பழைய வீடியோவை, எதிர்க்கட்சிகள் வெளியிடுவதற்கு முன்பாகவே சத்யபாமாவுக்கு நெருக்கமான தவெக கட்சி நிர்வாகி ஒருவரே வாட்ஸ்அப் குழுக்களில் திட்டமிட்டு கசியவிட்டுள்ளார். அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமாவுக்கு உடனடியாக மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த உள்ளூர் நிர்வாகிகள் அவரை வீழ்த்தவே இத்தகைய நகர்வை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு நாளான இன்று வெளியாகியுள்ள இந்த வீடியோ சர்ச்சை, வாக்காளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கட்சி மாறிய விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த மக்களிடையே இந்த செய்தி வேகமாகப் பரவியதை அடுத்து, திமுக மற்றும் அதிமுகவினர் இதனை தீவிர பிரச்சாரமாக முன்னெடுத்து வருகின்றனர். அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், சொந்தக் கட்சியினரின் இந்த பின்னடைவு தாராபுரம் தொகுதியின் தேர்தல் முடிவை தலைகீழாக மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வந்த விசாகா என்ற மாணவி, கடந்த செப்டம்பர் 29-ஆம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு…
சமூக வலைதளத்தில் பிரபலமான அரபு வலைப்பதிவரான அபு ஆதில் அல்-யாபியி, தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து எச்சரிக்கைப்…