தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். பாஜக மற்றும் அதிமுக இடையே நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
பாஜக தரப்பில் காங்கிரஸை விட ஒரு தொகுதி அதிகமாக, அதாவது 29 தொகுதிகளைக் கேட்டு அதிமுகவிடம் பிடிவாதம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இன்று டெல்லி செல்ல உள்ளார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சிக்கு 10 தொகுதிகள் வரை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அதிமுக தரப்பில் அமமுக-விற்கு 6 இடங்கள் மட்டுமே தர முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமித் ஷாவுடனான சந்திப்பிற்குப் பிறகு அமமுக-விற்கான இறுதித் தொகுதிகள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெல்லி பயணங்களின் மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அடுத்த சில நாட்களில் ஒரு முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…