அறிவற்றவர்களே..! “அடுத்து என்ன நடக்கும்னு பாருங்க” டிரம்ப்பின் அந்த ஒரு ட்வீட்… கதறும் ஈரான்..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக  கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானின் ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்தது என்றும், அதன் எண்ணெய் கட்டமைப்புகளுக்கு தற்போது சேதம் விளைவிக்கவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தால் எண்ணெய் கிணறுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரானிய தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்களை “அறிவற்றவர்கள்” (deranged scumbags) எனக் குறிப்பிட்ட அவர், இன்று என்ன நடக்கிறது என்று “பொறுத்திருந்து பாருங்கள்” (Watch what happens) என பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் தளங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்காவிடம் அளவிட முடியாத ஆயுத பலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனிக்கு (Mojtaba Khamenei) எதிராக அமெரிக்கா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் அமெரிக்காவின் நேரடிப் பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

6 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

6 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago