அடிமடியில் கைவைத்த டிரம்ப்..! இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி… சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்ச்சி…!!

Spread the love

அமெரிக்காவில் அமலில் உள்ள கட்டாய உழைப்பு (Forced Labour) தடைச் சட்டத்தை முறையாகப் பின்பற்றுவதில் தோல்வியடைந்து விட்டதாகக் கூறி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 59 நாடுகள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளைச் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) தற்போது பரிந்துரை செய்துள்ளார்.

இந்தப் புதிய வரி விதிப்புப் பரிந்துரையின்படி, இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கனடா, மெக்சிகோ, தைவான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக 10 சதவீதம் வரி விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிப் பரிந்துரையானது தற்போதைய நிலையில் பொதுமக்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதி வடிவம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகள் மீது அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கூடுதல் இறக்குமதி வரி செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், அதுவரை வசூலித்த வரியையும் திரும்பச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால் அந்த வரி விதிப்பை அமெரிக்கா கைவிட்டது. இந்தச் சூழலில், தற்போது கட்டாய உழைப்புச் சட்டத்தைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா மீண்டும் புதிய வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது சர்வதேச வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

9 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

9 மணத்தியாலங்கள் ago