“ஜெயிலுக்குப் போக வேண்டிய உன்னை நான் தான் காப்பாத்தினேன்” – நெதன்யாகுவை கெட்ட வார்த்தையால் திட்டியதை ஒப்புக்கொண்ட டிரம்ப்.. பகீர் பின்னணி அம்பலம்..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே லெபனான் விவகாரம் தொடர்பாக காரசாரமான தொலைபேசி உரையாடல் ஒன்று நடந்துள்ளது. இந்த உரையாடலின் போது நெதன்யாகுவை தான் “முற்றிலும் பைத்தியக்காரன்” என்று திட்டியதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க் போஸ்ட் பாட்காஸ்டில் பேசிய டிரம்ப், தான் கோபப்படவில்லை என்றும், ஆனால் லெபனானுடன் இஸ்ரேல் தொடர்ந்து சண்டையிட்டு வருவதைக் கண்டு தான் சற்று வருத்தமடைந்ததாகத் (perturbed) தெரிவித்துள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, நெதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணையின் போது அவருக்கு ஆதரவாக இருந்ததைக் குறிப்பிட்ட டிரம்ப், நெதன்யாகுவிற்கு நன்றியுணர்வு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் மட்டும் இல்லையென்றால் நீ இப்போது சிறையில் இருந்திருப்பாய், உன்னை நான் தான் காப்பாற்றுகிறேன். உன்னுடைய இந்த செயலால் இப்போது எல்லாரும் உன்னையும், இஸ்ரேலையும் வெறுக்கிறார்கள்” என்று டிரம்ப் கடுமையாக பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த மோதலுக்குப் பிறகும் தங்களுக்கிடையே நல்ல நட்பு இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப், “நாங்கள் ஒன்றாக இணைந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம், எனக்கு பிபியை (நெதன்யாகு) மிகவும் பிடிக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடலுக்குப் பிறகு, பெய்ரூட் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்ற தனது கோரிக்கையை ஏற்று இஸ்ரேல் படைகள் பின்வாங்கியதாகவும், ஹெஸ்பொல்லா அமைப்பும் இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“இந்த சிரிப்பை இனி பார்க்க முடியாது!”.. அர்ஷித்தின் துள்ளிக் குதித்த கடைசி நிமிடங்கள்.. இணையத்தை உலுக்கும் வீடியோ”..!!

மனித உருவில் வந்த அரக்கனான வளர்ப்புத் தந்தையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, அர்ஷித் என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த…

12 minutes ago

“என்னை மன்னிச்சிருங்க அம்மா, அப்பா!”.. வினாத்தாள் கசிவால் பறிபோன 18 வயது மாணவியின் உயிர்.. இணையத்தை உலுக்கும் தற்கொலைக் கடிதம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் மவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் அகான்க்சா சதுர்வேதி, ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும்…

25 minutes ago

“தம்பி, நாம தப்பிக்கிறது கஷ்டம், எங்கும் கரும்புகை” சாவுக்கு முன் வந்த கடைசி போன் கால்… டெல்லி ஹோட்டல் தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேர் உட்பட 21 பேர் பலி..!!

டெல்லி மாளவியா நகரிலுள்ள 'புளோரிஷ் ஸ்டே' (Flourish Stay) என்ற விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குருகிராமைச் சேர்ந்த…

25 minutes ago

லைக்குகளுக்காக இப்படியா?.. நண்பனை உயிரோடு கொளுத்திய இளைஞன்.. இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில், சமூக ஊடகங்களில் வெறும் சில லைக்குகளுக்காகவும் (Likes), தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்கள் பலரும்…

32 minutes ago

“லஞ்சம் வாங்கினா காலி” CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்… சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்..!!

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் (Town Planning Department) நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட…

33 minutes ago

“ரூ.2,000 கொடுத்துதான் வெற்றியா?” TVK வேட்பாளரின் அதிரடி வாக்குமூலம்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார்…

42 minutes ago