அடுத்த விக்கெட் அவுட்…. வைத்திலிங்கத்திற்கு ‘ஷாக்’ கொடுத்த எடப்பாடி… அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி…!

Spread the love

அதிமுக முன்னாள் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) செயலாளர் வினுபாலன், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ள செய்தி தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் மீண்டும் தாய் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வினுபாலன் இதற்கு முன்பு தஞ்சை மாவட்ட கவுன்சிலராகவும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கியப் பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவர். கடந்த 2022-ல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக ஓபிஎஸ் அணியில் இணைந்திருந்த அவர், பின்னர் அங்கிருந்து நீக்கப்பட்டார். அண்மையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த சூழலில், வினுபாலன் அதிமுகவில் மீண்டும் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வினுபாலன் மீண்டும் இணைந்திருப்பது தஞ்சை மற்றும் திருச்சி மண்டல அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தேர்தல் களத்தில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை மேலும் வலுப்படுத்தும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago