தூக்கத்தில் நிகழ்ந்த மரணம்…. கொல்கத்தா விடுதியில் நள்ளிரவு நடந்த பயங்கரம்…. 9 பேர் பலியான சோகம்….!

Spread the love

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் மிர்ஷா காலிப் வீதியில் அமைந்திருந்த தனியார் தங்கும் விடுதி ஒன்றில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் விடுதியில் தங்கியிருந்தவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த நிலையில், தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியதால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகே தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டி (AC) வெடித்ததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விடுதியில் போதிய தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என்பதும், அதேபோன்று கொல்கத்தாவிலும் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“என்ன கொடுமை சார் இது?”…. கழுதைக்கு நர்ஸ் வேலைக்கான ஆர்டர் கொடுத்த  அரசு…. மத்திய பிரதேசத்தில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை….!

மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…

10 minutes ago

“கேப்டன் ஆன்மா பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?”…. இதோட நிறுத்துங்க…. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்து வாங்கிய பிரேமலதா….!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…

23 minutes ago

விஜய் கூட்டணியில் சௌமியா அன்புமணி?… குண்டை தூக்கி போட்ட திருமாவளவன்…. கடைசி நேரத்தில் வெளியான பகீர் உண்மை….!

தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…

37 minutes ago

“இடைத்தேர்தல் களத்தில் தீப்பொறி”…. விஜய் கூட்டணி இறக்கிய மாஸ் பிரசாரம், ஸ்தம்பித்த ஹைவேஸ்….. அதிரும் தமிழகம்…!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…

45 minutes ago

“ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோயில் நிலம் சுவாகா”…. தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து திமுக பிரமுகர் அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…

50 minutes ago

திமுகவுடன் கூட்டணியா?….. அதிமுக ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி தினகரன்…. அலறும் தமிழக அரசியல் களம்…..!

மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…

1 மணத்தியாலம் ago